ETV Bharat / sitara

தீபாவளி பரிசாக வெளியான சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' போஸ்டர்கள்!

author img

By

Published : Nov 14, 2020, 4:41 PM IST

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'டாக்டர்' படத்தின் இரண்டு போஸ்டர்கள் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Doctor
Doctor

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'கோலமாவு கோகிலா' பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் வினய், நடிகை பிரியங்கா மோகன், யோகி பாபு, அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் 'செல்லம்மா' பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று சமூக வலைதளத்தில் வைரலானது.

இன்று (நவம்பர் 14) தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.