ETV Bharat / sitara

'ஹீரோ' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

author img

By

Published : Nov 28, 2019, 10:28 AM IST

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

sivakarthikeyans-hero
சிவகார்த்திகேயனின் ஹீரோ

சிவகார்த்திகேயன் - இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. இதில் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யான் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

முன்னதாக இந்தப்படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடலான 'மால்டோ கித்தாப்புல' உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ள நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் படக்குழு, நாளை இதன் இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிடவுள்ளது.

இதனிடையே ஹீரோவின் இரண்டாவது புதிய போஸ்டரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. முகத்தில் மாஸ்க் அணிந்து மிரட்டும் வகையில் இந்தப்போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க...

'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் 'சும்மா கிழி கிழிதான்'...

Intro:Body:

hero movie sivakarthikeyan

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.