'கோலமாவு கோகிலா' பட வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இவர்களுடன் வினய், யோகி பாபு, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்திலிருந்து, அனிருத் - ஜோனிடா காந்தி குரலில் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் 'செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கமா' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்பாடலை சிவகார்த்திகேயனே எழுதியுள்ளார்.
-
#Chellamma glimpse - https://t.co/Icb3rgwZuF
— Anirudh Ravichander (@anirudhofficial) October 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
See you all in theatres #DOCTORFromOct9 👍@Siva_Kartikeyan @Nelsondilpkumar @priyankaamohan @KVijayKartik @AlwaysJani @jonitamusic @SKProdOffl @KalaiArasu_ @KiranDrk @nirmalcuts @kjr_studios @SonyMusicSouth
">#Chellamma glimpse - https://t.co/Icb3rgwZuF
— Anirudh Ravichander (@anirudhofficial) October 5, 2021
See you all in theatres #DOCTORFromOct9 👍@Siva_Kartikeyan @Nelsondilpkumar @priyankaamohan @KVijayKartik @AlwaysJani @jonitamusic @SKProdOffl @KalaiArasu_ @KiranDrk @nirmalcuts @kjr_studios @SonyMusicSouth#Chellamma glimpse - https://t.co/Icb3rgwZuF
— Anirudh Ravichander (@anirudhofficial) October 5, 2021
See you all in theatres #DOCTORFromOct9 👍@Siva_Kartikeyan @Nelsondilpkumar @priyankaamohan @KVijayKartik @AlwaysJani @jonitamusic @SKProdOffl @KalaiArasu_ @KiranDrk @nirmalcuts @kjr_studios @SonyMusicSouth
இப்பாடல், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. காணொலியின் தொடக்கத்தில் பாடலைப் பற்றி சிவகார்த்திகேயன், அனிருத், இயக்குநர் நெல்சன் ஆகிய மூவரும் வேடிக்கையான முறையில் உரையாடுவது போன்று காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தது.
கரோனா காரணமாக 'டாக்டர்' படத்தின் வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில், 'செல்லம்மா... செல்லம்மா' பாடலின் க்ளிம்பஸ் காணொலியைப் படக்குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இந்தக் காணொலி வேகமாக நெட்டிசன்களால் பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: யூ-ட்யூபில் புதிய சாதனைபுரிந்த 'செல்லம்மா' பாடல்