நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்து அமைந்துள்ளது சிங்கம்பட்டி. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ஜமீனாக வலம்வந்த பகுதியாகும். அந்த ஜமீன் ஆளுகைக்குள்பட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் ராஜாவாக முடிசூட்டப்படுவது மரபு.
அத்தகைய சிங்கம்பட்டியின் 31ஆவது ராஜா பட்டம் பெற்றவரும், மன்னராட்சி காலத்தில் முடிசூடிய தமிழ்நாட்டின் கடைசி ராஜாவுமாகத் திகழ்ந்தவர் சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி.
இவர்தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவர் நேற்றிரவு (24-05-2020) வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89.
இவருக்கு மூன்றரை வயதில் முடிசூட்டப்பட்டது. முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகேஸ்வரன், சங்கராத் பஜன் ஆகிய மகன்களும்; அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகிய மகள்களும் உள்ளனர்.
1952ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்புச் சட்டம் வரும்வரை, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்துவந்தது. மேலும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்பட 8 கோயில்கள் சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தன.
இந்தியாவில் ஜமீன் முறை ஒழிக்கப்படுவதற்கு முன்பே சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி ராஜாவாக பதவி ஏற்றுவிட்டதால் இவர்தான் கடைசி ராஜா.
இவரின் வாழ்க்கையை மையமாக வைத்தே பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'சீமாராஜா' திரைப்படம் உருவானது. சிவகார்த்திகேயனுடன் சமந்தா, நெப்போலியன், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தீர்த்தபதி மறைவுக்கு சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமைகொள்வேன் அய்யா. அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
-
சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா🙏 அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் #RIPsingampattiRaja pic.twitter.com/hjUyA9AFXL
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா🙏 அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் #RIPsingampattiRaja pic.twitter.com/hjUyA9AFXL
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 25, 2020சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா🙏 அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் #RIPsingampattiRaja pic.twitter.com/hjUyA9AFXL
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 25, 2020
அதேபோல் இயக்குநர் பொன்ராம் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "ஜமீன் ராஜா மட்டும் அல்ல; தமிழ் இலக்கியவாதி, பண்பானவர். இவர் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் சிங்கம்பட்டி ஊர் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
#RIPsingampattiRaja ஐமீன் ராஜா மட்டும் அல்ல,தமிழ் இலக்கியவாதி பண்பானவர். இவர் பரிவாள் வாடும் குடும்பத்தார்க்கும் சிங்கம்பட்டி ஊர் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் pic.twitter.com/ErthQirCyj
— ponram (@ponramVVS) May 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#RIPsingampattiRaja ஐமீன் ராஜா மட்டும் அல்ல,தமிழ் இலக்கியவாதி பண்பானவர். இவர் பரிவாள் வாடும் குடும்பத்தார்க்கும் சிங்கம்பட்டி ஊர் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் pic.twitter.com/ErthQirCyj
— ponram (@ponramVVS) May 24, 2020#RIPsingampattiRaja ஐமீன் ராஜா மட்டும் அல்ல,தமிழ் இலக்கியவாதி பண்பானவர். இவர் பரிவாள் வாடும் குடும்பத்தார்க்கும் சிங்கம்பட்டி ஊர் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் pic.twitter.com/ErthQirCyj
— ponram (@ponramVVS) May 24, 2020
இதையும் படிங்க: 'சீமராஜா' பொன்ராம் இயக்கும் 'எம்ஜிஆர் மகன்' சசிக்குமார்!