ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இதில் பிரதீக் பப்பர், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஜினியின் அடுத்த திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக முன்பே தகவல்கள் வெளியாகின. சிவாவின் ஸ்கிரிப்ட் பிடித்த ரஜினி, அதில் சில மாற்றங்கள் செய்யச் சொன்னதாகக் கூறப்பட்டது. தற்போது மீண்டும் ரஜினியை சந்தித்திருக்கிறார் சிறுத்தை சிவா. இந்த சந்திப்பில் ஸ்கிரிப்டின் இரண்டாம் பாகம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Rajinism: உங்களுக்கு வயசே ஆகல! What a man!