நடிகர் கௌதம் கார்த்திக், லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் "சிப்பாய்". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார்.
இவர் சிம்புவின் "சிலம்பாட்டம்" படத்தை இயக்கியவர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
![சிப்பாய் படப்பிடிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-sippai-karthik-script-7205221_27072021093028_2707f_1627358428_835.jpg)
2013ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. 80 விழுக்காடு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டன.
மீண்டும் தொடங்கிய படப்பிடிப்புகள்
இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆர்.எஸ்.எஸ்.எஸ். தணிகைவேல் இப்பட்டத்தை தயாரிக்க முன்வந்துள்ளார்.
![ஆர்.எஸ்.எஸ்.எஸ். தணிகைவேல் தயாரிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-sippai-karthik-script-7205221_27072021093028_2707f_1627358428_980.jpg)
கரோனா பரவல் காரணமாகவும் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் படப்பிடிப்புகள் தொடங்கி முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: சூர்யாவை நெகிழச் செய்த கேரள ரசிகர்கள்