ETV Bharat / sitara

கவலைகள் போக்கி நடனமாடுங்கள் - சிம்ரன் வெளியிட்ட க்யூட் டான்ஸ் வீடியோ - சிம்ரன் லேட்டஸ்ட் விடியோ

தினம் ஒரு அப்டேட் என இம்மாதம் முழுவதும் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சிம்ரன், கவலையை விலக்கி வைத்துவிட்டு நடனமாடுங்கள் என்று செய்தியுடன் தனது க்யூட் டான்ஸ் வீடியோவை லேட்டஸ்டாகப் பதிவிட்டுள்ளார்.

Simran shares dance video
Actress Simran
author img

By

Published : Feb 25, 2020, 5:02 PM IST

சென்னை: பெப்பியான பாடலுக்கு இளைஞர் ஒருவருடன் ஜோடியாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளிவருகிறார் நடிகை சிம்ரன்.

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார் இடுப்பழகி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட சிம்ரன். 90களின் இறுதியிலும், 2000ஆவது ஆண்டில் தொடக்கக் காலத்திலும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்த இவர், லேட்டஸ்டாக இளைஞர் ஒருவருடன் இடுப்பை வளைத்து நெளித்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், உங்கள் கவலைகள் விலக்கி வைத்துவிட்டு நடனமாடுங்கள். உங்கள் போக்கில் நீங்கள் ஆடினால், இசையுடன் உங்களது உடல் ஒத்திசைத்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவிக்கின்றனர். சமூக வலைதளங்களை அவ்வப்போது பயன்படுத்திவந்த சிம்ரன், தற்போது அடுத்தடுத்து நாள்களில் புதிய பதிவுகளைப் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, தனது சிறப்பான நடனங்களை வைத்து ரசிகர் உருவாக்கிய வீடியோவை பதிவிட்ட சிம்ரன், கடந்த 20 ஆண்டுகளில் மாறாத ஒரு விஷயம் நடனம் மீது எனக்கு இருக்கும் காதல்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அத்துடன், காதலர் தினத்தை முன்னிட்டு மே அவுர் மேரி ஹவியாஷின் என்ற பெயரில் தனது புதிய மியூசிக் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் அளித்தார். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படங்கள், க்யூட் டிக்-டாக் வீடியோக்கள் எனத் தற்போது தினம் தினம் ரசிகர்களுக்கு விருந்தளித்துவருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.