ETV Bharat / sitara

ஆயுத பூஜையில் சிம்புவின் மாநாடு

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' திரைப்படத்தை ஆயுத பூஜையன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

maanadu
maanadu
author img

By

Published : Jul 7, 2021, 3:27 PM IST

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் பொலிட்டிக்கல் திரில்லரான ‘மாநாடு’ திரைப்பட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வெங்கட்பிரபு இயக்கிவரும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றனர்.

யுவன் இசையமைத்திருக்கும்இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘மெகெரசைலா’ ஜூன் 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஏறக்குறைய இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி ஓசூரில் படமாக்கப்பட்டுவருகிறது. இந்த வார இறுதியுடன் முழு படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. அதன்பின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தவுள்ளனர். இதனைத்தொடர்ந்து 'மாநாடு' திரைப்படத்தை இந்தாண்டு ஆயுத பூஜையன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மாநாடு' ஃபர்ஸ்ட்சிங்கிள்: யுவன், வெங்கட்பிரபுவின் குடும்ப பாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.