ETV Bharat / sitara

'மாநாடு' வெற்றி - கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு! - producer suresh kamatchi and simbu joins in maanaadu celebrates

பல்வேறு தடைகளுக்குப் பிறகு வெளியான 'மாநாடு' திரைப்படத்தின் வெற்றியை நடிகர் சிம்புவும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/27-November-2021/13751812_simbucake1.jpg

author img

By

Published : Nov 27, 2021, 4:23 PM IST

பல தோல்வி படங்களுக்கு பிறகு நடிகர் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது பல்வேறு தடைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி வெளியானது. மாநாடு திரைப்படமானது தீபாவளிக்கு வெளியிடுவதாக திட்டமிடப்பட்டு, பின்னர் படக்குழுவினரால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

படம் என்று வெளியாகிறதோ அன்றே தீபாவளி என்று கூட நடிகர் எஸ்.ஜ.சூர்யா மேடையில் பேசியிருந்தார். இத்தனைக்கும் தற்போது மாநாடு திரைப்படமானது விடுமுறை நாட்களில் கூட வெளியாகவில்லை. இருப்பினும் திரைப்படம் வெளியான நாள்முதல் இன்றுவரை தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாகி கல்லா கட்டி வருகின்றன.

சிம்பு வெட்டிய கேக்கின் புகைப்படம்
சிம்பு வெட்டிய கேக்கின் புகைப்படம்

மாநாடு திரைப்படம் குறித்து அனைத்து பத்திரிகைகளுமே பாசிட்டிவ் கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றன. வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே சூர்யாவின் அசரவைக்கும் நடிப்பு ரசிகர்களை ஆனந்த கூத்தாடச் செய்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெளியானத் தொடங்கி நேற்றுவரை ‘மாநாடு’ திரைப்படம் ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து, படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் சிம்பு ஆகியோர் ‘மாநாடு’ டிசைனிலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டும் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளனர். தற்போது இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: மிகப்பெரிய விருது கிடைத்ததுபோல் உணர்கிறேன் - எஸ்.ஜே. சூர்யா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.