ETV Bharat / sitara

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

author img

By

Published : Oct 3, 2020, 3:52 PM IST

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 'அவள் அப்படித்தான்' என்ற புதிய திரைப்படம் உருவாகிறது.

அவள் அப்படித்தான்
அவள் அப்படித்தான்

தமிழ் சினிமா திரை உலகம் பல கவர்ச்சி நடிகைகளை பார்த்துள்ளது. அந்த வகையில் மயக்கும் விழிகளால் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப்போட்ட ஒரு கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா.

தென்னிந்திய திரைப்பட இயக்குநர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதா, ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டவர்.

விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை 'அவள் அப்படித்தான்' என்ற பெயரில் காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணன், முரளி சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார்.

இதுகுறித்து படக்குழு தரப்பில் கூறுகையில்,

சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள், அவருடைய கட்டுடல். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம். கதாநாயகி தேர்ந்தெடுக்கப்பட்டு பின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் 'டர்ட்டி பிக்சர்' படம் வெளியாகி தேசிய விருதும் வென்றது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.