நடிகர் சிம்பு ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கியுள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ’ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாநாடு படத்தில் நடித்துவருகிறார்.
ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் ஆன்மிகம் என்று பிஸியாக இருக்கும் சிம்பு, சமீபத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது சிம்பு இருமுடி சுமந்து சபரிமலைக்குப் புறப்பட்டுச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: சிம்பு பட தலைப்பை வெளியிட்ட பத்து இயக்குநர்கள்