பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 5ஆம் தேதி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காகப் பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், மோடி தனது பயணத்தை ரத்துசெய்து திரும்பினார். இதற்கு அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
அந்தவகையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகர் சித்தார்த் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிலளித்திருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு அவர், சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் சில நாள்களுக்கு முன்பு உங்கள் பதிவிற்கு நகைச்சுவைக்காக கமெண்ட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் ட்விட்டிற்கு பதிலாக நான் பதிவு செய்த வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது.
-
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022
நான் பதிவிட்டது நகைச்சுவையானது மட்டுமே. அனைவரும் கூறும் வகையிலான உள்நோக்கம் எதுவும் இல்லை. ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக எனக்கு இல்லை. இத்துடன் இந்த விஷயத்தை நாம் விட்டுவிடலாம் என நம்புகிறேன். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் சாம்பியன் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாய்னா நேவாலிடம் ட்விட்டரில் வம்பு; நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு?