ETV Bharat / sitara

மிரட்டல் போலீஸ் #வால்டர் - டீஸர் வெளியீடு! - #வால்டர் டீஸர் வெளியீடு

காவல்துறை அலுவலர் கதாபாத்திரத்தில் சிபிராஜ் நடிக்கும் வால்டர் திரைப்படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Walter
Walter
author img

By

Published : Dec 31, 2019, 10:37 AM IST

காவல்துறை அலுவலர் கதாபாத்திரத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் 'வால்டர்'.

ஆக்‌ஷன் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தை யு. அன்பு இயக்குகிறார். சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கஞ்வாலா, சார்லி, முனீஷ்காந்த், சனம் ஷெட்டி, ரித்விகா உள்ளிட்ட பலர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார்.

1993ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வால்டர் வெற்றிவேல் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு விருத்து படைத்த நிலையில், தற்போது அவரது மகன் சிபிராஜ் நடிப்பில் வால்டர் படம் 2020-இல் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இதன் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு வால்டர் படத்தின் டீஸரை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார். காவல்துறை அலுவலர் கதாபாத்திரத்தில் முரட்டு மீசையுடன் வலம்வரும் சிபிராஜின் வால்டர் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க...

2019 தமிழ் சினிமா கடந்துவந்த பாதை...!

Intro:Body:

Walter movie teaser - Maharaja

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.