புதுமுக இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் "இன்று நேற்று நாளை". சைன்ஸ் பிக்ஷ்ன் படமான இதில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணி 2020ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. தற்போது, இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பூஜை இன்று (ஜனவரி 18) போடப்பட்டது. இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிவற்றை ரவிக்குமார் எழுதுகிறார்.
அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், கருணாகரன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளனர்.