நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். இப்படத்தின் ’ப்ரோ’ பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள வேளச்சேரியில் நடைபெற்றது. அவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
அப்போது படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி பேசுகையில், ”நடிகர் சந்தானம் ஒரு காமெடி நடிகர் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், அவர் ஒரு திறமையான நடிகர். தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த நடிகர்களில் சந்தானமும் ஒருவர். அவருக்குள் ஒரு வெறி இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு எமோஷனல் சீன் இருக்கிறது. மூன்றரை நிமிடங்கள் ஓடும் அந்தக் காட்சியை சந்தானம், ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டார்.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஹீரோ சந்தானம். அது சர்வர் சுந்தரம் படம் வெளியான பிறகு அனைவருக்கும் புரியும். இது என்னுடைய கதை என்பதற்காக நான் இவ்வாறு சொல்லவில்லை. படம் அவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது” என்று பேசியுள்ளார். சர்வர் சுந்தரம் படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ஜோக்கர் நடிகரின் 'டாப்லெஸ்' வெப் சீரிஸ் - டீஸர் வெளியீடு