ETV Bharat / sitara

'ஜெய் பீம்' படம் பார்த்து சூர்யாவை வாழ்த்திய நல்லகண்ணு!

'ஜெய் பீம்' படம் பார்த்து நடிகர் சூர்யாவையும் இயக்குநர் ஞானவேலையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மனதாரப் பாராட்டினார்.

Jai bhim
Jai bhim
author img

By

Published : Nov 26, 2021, 1:30 PM IST

ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). இதில் ரஜிஷா விஜயன் (Rajisha Vijayan), லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Jai bhim
சிவகுமாருக்கு வணக்கம் வைக்கும் நல்லகண்ணு

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது.

பலதரப்பினர் பாராட்டு

இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் (CM Stalin), கமல் ஹாசன், இயக்குநர் பா. இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்டப் பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

Jai bhim
ஞானவேலை பாராட்டும் நல்லகண்ணு

அதிகாரத்தை எதிர்த்துச் சட்டப் போராட்டம் மூலம் எவ்வாறு நீதி நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஞானவேல் வருத்தம்

ஆனாலும் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும்விதமாக சில காட்சிகளும், பெயரும் உள்ளதாகக் கூறி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

Jai bhim
ஜெம் பீம் படக்குழுவினரைப் பாராட்டிய நல்லகண்ணு

சூர்யாவிற்கு வன்னியர் சமூகத்தைச் சார்ந்த பல நிர்வாகிகள் நெருக்கடியையும் எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர். சமீபத்தில் ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ, எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் தனக்கு சிறிதளவும் இல்லை எனக் கூறி வருத்தம் தெரிவித்தார்.

நல்லகண்ணு பாராட்டு

இந்நிலையில், நல்லகண்ணு ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு இயக்குநர் ஞானவேல், நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவை மனதாரப் பாராட்டினார். அவர்களுடன் நடிகர் சிவகுமாரும் உடனிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Jai bhim
சூர்யாவிற்கு கை கொடுத்து பாராட்டும் நல்லகண்ணு

இதையும் படிங்க: Jai Bhim Controversy: வருத்தம் தெரிவித்தார் ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.