வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ஆகியோரை வைத்து ராக்கி என்ற படத்தை இயக்கியுள்ளவர் அருண் மாதேஸ்வரன். இப்படம் வெளியாவதற்கு முன்னரே 'சாணிக்காகிதம்' என்ற படத்தை எடுத்துவருகிறார்.
பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான வேடத்தில் நடிக்கிறார்.
'சாணிக்காகிதம்' படத்தில் முதல்முறையாக நடிகராக இயக்குநர் செல்வராகவன் மேலும், இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல்முறையாக இவர் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகின்றது.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று (பிப். 25) இணைந்துள்ளதாக இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.