இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சீறு'. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். நடிகர் நவ்தீப் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
வேல்ஸ்ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். காதல், ஆக்ஷன் என கமர்ஷியலாக உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதனையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், “வேல்ஸ் பிலிம்ஸ் வேலை செய்வது சொந்த வீட்டில் இருப்பது போல் இருக்கும். 'சீறு' படத்தில் தான் பணியாற்றிய அனுபவமும் இதுபோன்றுதான். நான் இப்போது இசையத் தவிர பிற இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். விரைவில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவேன்.
'றெக்க' படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா பாடல் உருவாக காரணம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்கள் தான்.
ரத்தின சிவாவும் அப்படி பட்ட இயக்குநர் தான். கண்ணான கண்ணே பாடி இணையத்தில் வைரலான பார்வையற்ற பாடகரான திருமூர்த்தியை இப்படத்தில் பாடவைக்க ரத்தின சிவா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
'சீறு' படத்தில் பாடிய பின் திருமூர்த்தி தற்போது வெளிநாடுகளில் சென்று பாடும் அளவிற்கு பிஸியாக உள்ளார்.
இந்த படத்தில் திருமூர்த்தியை தவிர வேறு இரண்டு புதிய பாடகர்களை அறிமுகம் செய்துள்ளேன். அவர்களில் ஒருவர் பாடகர் சங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவன்.
சங்கர் மகாதேவன் மகனாக இருந்தாலும் திறமை தான் முக்கியம். என்னை பொறுத்தவரை சங்கர் மகாதேவன் மகனும் திருமூர்த்தியும் ஒன்று தான் என்றார்.