ETV Bharat / sitara

'ஏழு  கதாபாத்திரங்களை நடிக்க வைக்க 600 பேரை ஆடிஷன் செய்தேன்' - இயக்குநர் ரத்தின சிவா - ரத்தின சிவா செய்தியாளர் சந்திப்பு

இயக்குநர் ரத்தின சிவாவின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ' சீறு'. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

seeru director rathna siva press meet
seeru director rathna siva press meet
author img

By

Published : Feb 2, 2020, 12:20 PM IST

'சீறு' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர் ரத்தின சிவா படம் குறித்த தன் அனுபவங்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்தார்.

அப்போது பேசிய அவர், படத்தின் கதையை முதலில் ஐசரி கணேஷை சந்தித்துக் கூறியதாகத் தெரிவித்தார். படத்தின் கதையை ஐசரி கணேஷ் முழுவதும் கேட்கவில்லை எனத் தெரிவித்த இயக்குநர், படத்தில் இடம்பெற்ற பவித்ரா என்ற கதாபாத்திரத்தின் செய்தியாளர் சந்திப்பு காட்சியை மட்டும் தான் கூறியதாகவும்; அதைக் கேட்டவுடனே இந்தப் படத்தை நாம் எடுத்துவிடலாம் என்று ஐசரி கணேஷ் உடனடியாக ஒப்புதல் அளித்தார் எனவும் கூறினார்.

தொடர்ந்து நடிகர் ஜீவாவை கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பைத் தொடங்கியதாகவும் படப்பிடிப்பில் இயக்குநர் ஜீவா கலகலப்பாக எனர்ஜியுடன் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

seeru director rathna siva press meet
ஐசரி கணேஷுடன் இயக்குநர் ரத்தின சிவா

தனது இயக்கத்தில் வெளிவந்த 'றெக்க' படத்தின் மாலா டீச்சர் கதாபாத்திரம்போல், இப்படத்தில் பவித்ரா கதாபாத்திரம் நிற்கும் எனத் தெரிவித்த ரத்தின சிவா, இசையமையப்பாளர்களில் நேரத்தை மிகச் சரியாக கடைபிடிப்பவர் டி. இமான் எனவும்; அவரது இசையில் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன எனவும் குறிப்பிட்டார். மேலும் எந்த இயக்குநருடன் இணைந்தாலும் மிகச் சிறந்த பாடல்களைக் கொடுப்பவர் இமான் எனவும் புகழாரம் சூட்டினார்.

இந்தப் படத்தில் நடிக்க ஏழு மாணவிகள் தேவைப்பட்டார்கள் எனவும் அதற்காக சுமார் 600 பேரை ஆடிஷன் செய்து, ஏழு பேரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததாகவும் ரத்தினசிவா தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வேறொருவரைக் காதலிக்கும் சனம் ஷெட்டியுடன் நான் எப்படி வாழ முடியும்' - ’பிக்பாஸ்’ தர்ஷன்

Intro:6 கதாபாத்திரங்களுக்கு 600 பேரை ஆடிசன் செய்தேன் இயக்குனர் ரத்தின சிவாBody:சீறு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் ரத்தின சிவா பேசுகையில்,

இந்த கதையை முதலில் ஐசரி கணேஷ் அவர்களை சந்தித்து பேசினேன் அவர்கள் அதை முழுவதும் கேட்கவில்லை படத்தில் இடம்பெற்ற பவித்ரா என்ற கதாப்பாத்திரத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு காட்சியை மட்டும் கூறினேன் அதைக் கேட்டவுடனே இந்த படத்தை நாம் எடுத்து விடலாம் என்று உடனடியாக ஒப்புதல் அளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். தொடர்ந்து நடிகர் ஜீவாவை கதாநாயகனாக தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை துவங்கினோம் படப்பிடிப்பில் இயக்குனர் ஜீவா கலகலப்பாக எனர்ஜியுடன் செயல்பட்டார் . பிடிப்பில் ஜீவாவின் அருகே சுருக்கம் காணப்பட்டது வயதாகி விட்டதோ என்று கூட நான் எண்ணி அவரிடம் கேட்டேன் அதன் பிறகு ஒரு மாதத்தில் அதே சுருக்கம் எனது கண்ணத்தில் வந்துவிட்டது காரணம் நடிகர் ஜீவா 24 மணிநேரமும் சிரித்துக்கொண்டே சிரித்து கொண்டே ஜாலியாக இருப்பதால் அப்படி சுருக்கம் என்று தெரிந்தது. எனது இயக்கத்தில் வெளிவந்த றெக்க படத்தில் மாலா டிச்சர் போல் இப்படத்தில் பவித்ரா கதாபாத்திரம் நிற்கும்.
இசைமையப்பாளர்களில் நேரத்தை மிகச்சரியாக கடைப்பிடிப்பவர் டி இமான் அவரது இசையில் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளது.என் படம் மட்டுமல்ல எந்த இயக்குனருடன் இணைந்தாலும் மிகச்சிறந்த பாடல்களை கொடுப்பவர் இமான்

பிரசன்னா எஸ்.கிஷோர் மிகச்சிறந்த படைப்பாளி நல்ல எடிட்டர் எனக்கு ஒரு தங்கை இருந்தால் அவருக்கு திருமணம் செய்து கொடுப்பேன் ஆனால் இல்லை

இந்தப் படத்தில் 7 மாணவிகள் நடிக்க தேவைப்பட்டார்கள் அதற்காக சுமார் 600 பேரை ஆடிஷன் செய்து 7 பேரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தேன்

Conclusion:படம் வெளிவந்த பிறகு இந்த ஏழு பேர் யார் என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு அவர்களின் கதாபாத்திரம் அமைந்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.