ETV Bharat / sitara

'ப்ளாக் விடோ' நடாஷாவாக இனி நடிக்கப்போவதில்லை - ஸ்கார்லெட்

கரோனா தொற்று காலத்தில் வெளியான படங்களில் ஸ்கார்லெட் நடித்த 'ப்ளாக் விடோ' வெளியான முதல் வாரத்தில், அமெரிக்க திரையரங்குகளில் கிட்டத்தட்ட 80 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து அதிக வசூல் என்ற சாதனையை படைத்துள்ளது.

Scarlett Johansson
Scarlett Johansson
author img

By

Published : Jul 13, 2021, 2:23 PM IST

ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் சிறுவயது முதலே பல்வேறு நாடகங்களில் நடித்து பின்னர் 1994ஆம் ஆண்டு வெளியான ‘நார்த்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து 'மேனி&லோ', 'தி ஹார்ஸ் விஸ்பெரர்', 'கோஸ்ட் வேர்ல்ட்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இருப்பினும் ஸ்கார்லெட், மார்வெல் சினிமாட்டிக் உலகில் லேடிஸ் சூப்பர் ஹீரோவான 'ப்ளாக் விடோ' கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். ஸ்கார்லெட் பெயரைவிட 'ப்ளாக் விடோ' கதாபாத்திரத்தின் பெயரான நடாஷா ரோமனாஃப் மிகவும் பிரபலமானது.

மார்வெல் உலகின் சூப்பர் ஹீரோக்களான 'ஐயர்ன் மேன்', 'கேப்டன் அமெரிக்கா', 'தோர்', 'டாக்டர் ஸ்ரேஞ்ச்', 'பிளாக் பாந்தர்', 'ஸ்பைடர் மேன்' ஆகியோருக்கு பிண்ணனி கதைகளுடன் தனி தனி படங்களும் வெளியாகின.

அந்த வகையில், மார்வெல் உலகின் லேடி சூப்பர் ஹீரோவான 'ப்ளாக் விடோ' பிண்ணனி கதை குறித்தான திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு மே மாதமே திரையரங்கில் வெளியாகவிருந்த 'ப்ளாக் விடோ' கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இறுதியாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தாண்டு ஜூலை 9ஆம் தேதி வெளியானது. அதே நாளில் சில நாடுகளில் ப்ளாக் விடோ டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியானது. திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் ஓரே நாளில் வெளியான முதல் மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படம் 'ப்ளாக் விடோ' என்னும் சாதனையை படைத்தது.

விமர்சனம் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவேற்பை பெற்றிருக்கும் ப்ளாக் விடோ வசூல்ரீதியாகவும் அசத்தியுள்ளது. படம் வெளியான சில நாட்களிலேயே திரையரங்கில் மட்டும் 80 மில்லியன் டாலர்களை வசூலித்தது. கரோனா தொற்று காலத்தில் வெளியான படத்தில் அதிக வசூலாகும்.

இந்நிலையில், சமீபத்தில் நடைப்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்ட ஸ்கார்லெட் கூறுகையில், 'ப்ளாக் விடோ' நடாஷாவாக இனி நான் நடிக்கப்போவதில்லை. இந்த படத்தில் நடித்தற்காக நான் உண்மையில் மகிழ்ச்சியும் மன திருப்தியும் அடைகிறேன்.

மார்வெலுடன் மற்ற வழிகளில் தொடர்ந்து ஒத்துழைக்க நான் விரும்புகிறேன், ஏனென்றால் அங்கே நம்ப முடியாத கதைகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க: ”பெற்றோராக இருப்பது வாழ்நாளின் விலைமதிப்பற்ற பகுதி” - ஸ்கார்லெட் ஜோஹன்சன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.