நடிகர் சத்யராஜின் நடிப்பில் உருவாகி உள்ள 'தீர்ப்புகள் விற்கப்படும்' திரைப்படத்தின் மூலம் தீரன் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை ஹனி பீ கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முதன் முறையாக ரெட் மான்ஸ்ட்ரோ 8K கேமராவைப் பயன்படுத்தி சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை பிரசாத் எஸ்.என். இசையமைக்கிறார். மணி குமரன் சங்கரா படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் குறித்து தீரன் கூறுகையில், இந்தப் படத்தில் சத்யராஜ் தனது மாயாஜால எனர்ஜியால் எங்களை அடிக்கடி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
தினேஷ் சுப்பராயனின் கடுமையான சண்டை காட்சிகளில் சத்யராஜ் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்தது. ஆனால் சத்யராஜ் சண்டைக் காட்சிகளில் தனது அதிரடி நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
சத்யராஜின் இந்த முயற்சியால் நாமும் உடலை கட்டுக்கோப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க வழக்கமான பயிற்சிகளைப் பெற வேண்டும் என்று எண்ணவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.