ETV Bharat / sitara

சசிகுமாரின் 'ராஜவம்சம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு - rajavamsam release date

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ராஜவம்சம்' திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

author img

By

Published : Sep 20, 2021, 9:45 PM IST

சென்னை: நடிகர் சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராஜவம்சம். இந்த படத்தில் நிக்கி கல்ரானி, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ் , மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு, 'கும்கி' அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

செந்தூர் பிலிம்ஸ் டி.டி.ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது பக்க குடும்பப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கதிர்வேலு சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பதால் நகைச்சுவை நிறைந்தப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதி கரோனா காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், இப்படம் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராஜவம்சம் ட்ரெய்லர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.