இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் திரைப்படம் 'கொம்பு வச்ச சிங்கம்டா'. சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் பிரபாகரன்-சசிகுமார் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. நட்பையும் காதலையும் மையமாக வைத்து 2012ஆம் ஆண்டு வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படம் அமோக வெற்றிபெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.
படங்கள் வெளியாகி ஏழு வருடங்களை கடந்துவிட்ட நிலையில் சுந்தரபாண்டியன் படத்தின் இரண்டாம் பாகம் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன், காமெடி நடிகர் சூரி, இனிகோ பிரபாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 49 நிமிடங்கள் இடம்பெறும் இந்த டீசர் ரசிக்கும்படி அமைந்துள்ளது. சசிகுமாரின் தந்தை இறந்ததாக வரும் வாய்ஸ் ஓவர், இதில் சுந்தரபாண்டியன் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. பின்னனி இசையில் நடந்து வரும் சசிகுமார், அவரது முகத்தை காட்டாமல் படத்தின் டீசர் முடிவடைகிறது.
-
Here is the teaser of #Kombuvatchasingamda #KVS #KVSTEASER #Natpuhttps://t.co/6MyCoPDMBq@RedhanCinemas@dirprabhas@inder3kumar@Madonnasebast14@sooriofficial@eka_dop@dhibuofficial@editordonbosco@onlynikil@SonyMusicSouth
— M.Sasikumar (@SasikumarDir) July 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here is the teaser of #Kombuvatchasingamda #KVS #KVSTEASER #Natpuhttps://t.co/6MyCoPDMBq@RedhanCinemas@dirprabhas@inder3kumar@Madonnasebast14@sooriofficial@eka_dop@dhibuofficial@editordonbosco@onlynikil@SonyMusicSouth
— M.Sasikumar (@SasikumarDir) July 3, 2019Here is the teaser of #Kombuvatchasingamda #KVS #KVSTEASER #Natpuhttps://t.co/6MyCoPDMBq@RedhanCinemas@dirprabhas@inder3kumar@Madonnasebast14@sooriofficial@eka_dop@dhibuofficial@editordonbosco@onlynikil@SonyMusicSouth
— M.Sasikumar (@SasikumarDir) July 3, 2019
சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு தொடர் தோல்வியை கொடுத்துவரும் எஸ்.பிரபாகரன், சசிகுமார் ஆகிய இருவருக்கும் 'கொம்பு வச்ச சிங்கம்டா' வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.