சரவணா ஸ்டோர்ஸ் மூலம் உலகம் முழுவதும் பல கிளைகள் திறந்து புகழ்பெற்றவர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி. இவர் தற்போது புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.
இப்படத்தை மிக பிரமாண்டமாக அவரே தயாரித்தும் வருகிறார். ஜேடி, ஜெர்ரி என இரு இயக்குநர்கள் இந்தப் படத்தை இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

வைரமுத்து, சிநேகன், பா. விஜய் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பிரமாண்டமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கதாநாயகியாகும் பிரபல பின்னணிப் பாடகி!