சரத்குமாரின் 'இரை' வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பு இன்று (பிப்ரவரி 18) சென்னையில் நடைபெற்றது. விழாவில் சரத்குமார், ராதிகா சரத்குமார், கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன், இணையத் தொடரின் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது ராதிகா சரத்குமார் பேசுகையில், “சினிமா, சீரியலைத் தொடர்ந்து முதல்முறையாக ஓடிடியில் களமிறங்கியுள்ளேன். அதிலும் எனது கணவரின் படத்தை முதல்முதலாகத் தயாரித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
நாட்டாமை, சூர்யவம்சம் படங்களில் நடித்த சரத்குமார் தற்போதுள்ள தலைமுறைக்குத் தகுந்தவாறு தன்னை மறுஉருவாக்கம் செய்துகொண்டுள்ளார்” என்றார்.
இந்தத் தொடரானது அர்ச்சனா சரத் எழுதிய புத்தகத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புத்தகம் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என சரத்குமார் விழாவில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: நீருக்கடியில் தீபிகா படுகோனுடன் சித்தாந்த் சதுர்வேதி!