ETV Bharat / sitara

மீண்டும் உருவாகும் விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம் 2' - விசுவின் சம்சாரம் அது மின்சாரம்

சென்னை: மறைந்த விசு கடைசியாக கதை, திரைக்கதை எழுதிய 'சம்சாரம் அது மின்சாரம் 2' படத்தின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

visu
visu
author img

By

Published : Nov 6, 2020, 12:29 PM IST

இயக்குநர் விசு எழுதி இயக்கி, தேசிய விருது வென்ற திரைப்படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மறைந்த விசு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை, திரைக்கதை, வசனம் எழுதி 'சம்சாரம் அது மின்சாரம் 2' என்ற பெயரில் இறுதியாக உருவாக்கி வைத்துள்ளார்.

தற்போது இப்படத்தை விசுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வி.எல்.பாஸ்கர் ராஜ் இயக்குகிறார். மக்கள் அரசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். பா.விஜய் பாடலாசிரியராக உள்ளார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராஜ்கிரணிடம் பேசப்பட்டு வருகிறது. மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் குறித்து பாஸ்கர் ராஜ் கூறுகையில், "இப்படம் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் ரசிக்கக்கூடிய கதம்பமான ஒரு குடும்ப கதையாகும். அனைத்து தரப்பட்ட மக்களையும் திரையரங்கு நோக்கி வரவழைக்கும் இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை. இன்னொரு வீட்டில் மின்சாரமாக இருக்கும் சம்சாரத்தின் கதை இது" எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.