ராஜ், டீகே ஆகியோரின் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸ் வெளியானது. இத்தொடரில் இலங்கையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சென்னையில் குண்டுவெடிப்புக்குத் திட்டமிடுவது போன்ற காட்சிகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. இதில் சமந்தா பயங்கரவாத பெண் வேடத்தில் நடித்திருந்தார்.
ட்ரெய்லர் வெளியீட்டின்போதே பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பின. தமிழர்களைத் தவறாகச் சித்திரிக்கும் பாணியில் இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக சீமான் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பின்னர் ஜூன் 4ஆம் தேதி வெளியாகி சமந்தாவின் நடிப்பு பரவலாகப் பாராட்டுகளைக் குவித்தது. சமீபத்தில் நடைபெற்ற மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், இந்த வெப் தொடருக்காக சமந்தாவுக்குச் சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸானது இணையத்தில் அதிக அளவில் பார்க்கப்படும் இந்திய வெப் சீரிஸ்களின் டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. முன்னதாக யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கில் வெப் சீரிஸில் நடிக்கவில்லை, அப்படி யாருடைய மனதேனும் புண்படுத்தப்பட்டிருந்தால் மன்னித்து விடவும் என சமந்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய திரைப்பட வரிசையில் 'ஜெய்பீம்' சாதனை!