ETV Bharat / sitara

சல்மான்கானுக்குப் பிடித்த விஜய் படம் இதுவா? - Dabangg 3

நடிகர் விஜய் நடித்து வெளிவந்த 'தெறி', 'திருப்பாச்சி' ஆகிய திரைப்படங்கள் தனது ஃபேவரைட் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

salman khan about vijay
author img

By

Published : Oct 29, 2019, 9:05 PM IST

பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான் தற்போது 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகமான 'தபாங்-3' யில் நடித்துள்ளார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் புரோமோஷன் வேலைகளும் துரிதமாக நடைபெற்றுவருகிறது.

'தபாங்-3' திரைப்படத்தின் புரோமோஷனுக்காக, சென்னையிலுள்ள தனது தென்னிந்திய ரசிகர்களுடன் காணொலி கலந்தாய்வு மூலம் சல்மான் கான் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது தென்னிந்திய உச்சபட்ச நட்சத்திரங்களான ரஜினி, அஜித், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களின் படங்கள், தற்போது பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருவதாகக் கூறினார்.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து வெளிவந்த 'தெறி', 'திருப்பாச்சி' ஆகிய திரைப்படங்கள் தனது ஃபேவரைட் எனவும் சல்மான் கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'ஹீரோ' படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் சல்மான் கான் லான்ச் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இந்தியன்-2' படத்திற்காக மீண்டும் கமலுடன் இணையும் ஆடை வடிவமைப்பாளர்!

Intro:Body:

 salman khan about vijay

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.