ETV Bharat / sitara

ருத்ர தாண்டவம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன். ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author img

By

Published : Sep 18, 2021, 7:58 AM IST

ருத்ர தாண்டவம்
ருத்ர தாண்டவம்

’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன். ஜி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 'திரௌபதி'. ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனையடுத்து மோகன். ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ருத்ர தாண்டவம்'. ரிஷி ரிச்சர்ட் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ருத்ர தாண்டவம்
ருத்ர தாண்டவம்

இந்நிலையில் 'ருத்ர தாண்டவம்' திரைப்படம் வரும் 1ஆம் தேதி நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளியான 'ருத்ர தாண்டவம்' பட ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: இராவண கோட்டம் படப்பிடிப்பு நிறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.