ETV Bharat / sitara

'ஆர்ஆர்ஆர்' ஃபர்ஸ்ட் சிங்கிள்: ஒன்றிணைந்த 'நட்பு'! - ஆர்ஆர்ஆர்

ராஜமொளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஃபர்ஸ்ட்ஸ் சிங்கிள் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது.

RRR
RRR
author img

By

Published : Jul 27, 2021, 1:38 PM IST

Updated : Jul 27, 2021, 2:38 PM IST

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்' (ரத்தம் ரணம் ரௌத்திரம்). ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆருடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜு, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் முக்கிய கதாநாயகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதுமட்டுமல்லாது ஆங்கிலம், போர்த்துகீசியா, கொரியா, துருக்கி, ஸ்பானிஷ் என உலக மொழிகளிலும் வெளியாகிறது. இந்தப் படத்தின் தமிழ்நாடு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

'பாகுபலி' இசையமைப்பாளர் கீரவாணியே 'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு இசைமயைக்கிறார். இந்தப்படத்தில் நட்பை மையமாக வைத்து பாடல் ஒன்று உள்ளது. இந்தப்படலானது ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது.

இந்தபாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதில் தமிழ் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

இப்பாடலை மலையாளத்தில் பின்னணி பாடகர் விஜய்ஜேசுதாஸூம் கன்னட பாடலை இசையமப்பாளர் அமித் திரிவேடியும் தெலுங்கில் ஹேமசந்த்ராவும் இந்தியில் யாஷின் நாசரும் பாடியுள்ளனர். 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இசை வெளியிட்டு உரிமையை லகரி மியூசிக்கும் டீ-சீரிஸும் சமீபத்தில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முன்னறிவிப்பின்றி வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' பட அப்டேட்

Last Updated : Jul 27, 2021, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.