மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா தற்போது 'நெற்றிக்கண்' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் 'மூக்குத்தி அம்மன்' என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாகப் பேசி நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் பிரபு இயக்கியிருந்தார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது. ரசிகர்களிடைய இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
-
And here it is - Mookuthi Amman ! Starring the Lady Superstar Nayanthara..! Produced by Vels Film International.! I’ve written the story,screenplay, dialogues and directing it with NJ Saravanan.! #Summer2020 release.! ❤️#MookuthiAmman 🙏 pic.twitter.com/0YYmbI87lm
— RJ Balaji (@RJ_Balaji) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And here it is - Mookuthi Amman ! Starring the Lady Superstar Nayanthara..! Produced by Vels Film International.! I’ve written the story,screenplay, dialogues and directing it with NJ Saravanan.! #Summer2020 release.! ❤️#MookuthiAmman 🙏 pic.twitter.com/0YYmbI87lm
— RJ Balaji (@RJ_Balaji) November 10, 2019And here it is - Mookuthi Amman ! Starring the Lady Superstar Nayanthara..! Produced by Vels Film International.! I’ve written the story,screenplay, dialogues and directing it with NJ Saravanan.! #Summer2020 release.! ❤️#MookuthiAmman 🙏 pic.twitter.com/0YYmbI87lm
— RJ Balaji (@RJ_Balaji) November 10, 2019
இதனையடுத்து ஆர்ஜே பாலாஜி 'மூக்குத்தி அம்மன்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாது கதை எழுதி இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தையும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. மேலும் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை இயக்குநர் என்.ஜே சரவணனுடன் சேர்ந்து இயக்குகிறார்.
தற்போது இப்படத்தின் போஸ்டரை ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை 2020ஆம் ஆண்டு கோடையில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி நயன்தாராவுடன் ஏற்கெனவே 'நானும் ரவுடி தான்', 'வேலைக்காரன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க:
கோவா சர்வதேச விழாவில் கலந்துகொள்ளும் 'ரவுடிபாயும் ரகுல் பிரீத் சிங்கும்'!