பாடகி, நடிகை ஜூலி கார்லாண்ட் வாழ்க்கையைப் பற்றிய கதையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாக வென்றுள்ளார், நடிகை ரெனீ ஜெல்வெகர்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது 'ஜூடி' படத்துக்காக ரெனீ ஜெல்வெகர், 'ஹர்ரியட்' படத்துக்காக சிந்தியா எரிவோ, 'மேரேஜ் ஸ்டோரி' படத்துக்காக ஸ்கார்லெட் ஜோகன்சன், 'பாம்ஷெல்' படத்துக்காக சார்லிஸ் தெரோன், 'லிட்டில் உமன்' படத்துக்காக சாயர்ஸ் ரோனன் ஆகியோர் பரிந்துரைப் பட்டியலில் இருந்தனர்.
இந்தப் போட்டியில் ரெனீ ஜெல்வெகர் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றார். இதையடுத்து விருதை பெற்ற பின்னர் ரெனீ பேசும்போது கூறியதாவது: 'ஹீரோக்கள் நம்மை ஒன்றிணைத்திருக்கிறார்கள். நமக்குள் இருக்கும் சிறந்த விஷயங்களைக் கண்டறிந்தவர்தான் நம்மில் இருக்கும் சிறந்த அம்சங்கள், நமக்கு ஊக்கமளித்த விஷயங்களைக் கண்டறிய வேண்டும்' என்று கூறினார்.
ஏற்கெனவே 'ஜூடி' படத்துக்காக சிறந்த நடிகை ஃபாப்டா, கோல்டன் குளோப் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார் ரெனீ. இதைத்தொடர்ந்து தற்போது சிறந்த நடிகைக்கான முதல் ஆஸ்கரை கையில் பிடித்தார்.
1930களிலிருந்து 1960ஆம் ஆண்டு வரை நடிகை, பாடகி, டான்ஸர் எனப் பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தவர் ஜூடி கார்லாண்ட். ஹாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த இவர், நான்கு முறை திருமணம் செய்துகொண்டார். 1969ஆம் ஆண்டு தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது இறப்பு ஹாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
#Oscars Moment: Renée Zellweger wins Best Actress for her work in @JudyGarlandFilm. pic.twitter.com/ZkciWT0d2u
— The Academy (@TheAcademy) February 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Oscars Moment: Renée Zellweger wins Best Actress for her work in @JudyGarlandFilm. pic.twitter.com/ZkciWT0d2u
— The Academy (@TheAcademy) February 10, 2020#Oscars Moment: Renée Zellweger wins Best Actress for her work in @JudyGarlandFilm. pic.twitter.com/ZkciWT0d2u
— The Academy (@TheAcademy) February 10, 2020
இதையடுத்து இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான 'ஜூடி' படத்தில் அவரது கேரக்டரில் தோன்றினார் ரெனீ. தோற்றம், நடை, உடை, முகபாவனை என ஜூடியை உரித்து வைத்தார்போல், நடிப்பை வெளிப்படுத்தியாக பாராட்டையும் பெற்றார்.
இதைத்தொடர்ந்து இந்தப் பாராட்டு, தற்போது அவரது கைகளில் முதல் முறையாக ஆஸ்கர் விருதைப் பெற்றுத்தந்திருக்கிறது.
இதையும் படிங்க: