இயக்குநர் லிங்குசாமி 'சண்டைக்கோழி 2' படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு '#RAPO19' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அன்பறிவு சண்டை இயக்குநராக பயணியாற்றவுள்ளார்.
ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை ‘மாஸ்டர் பீஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் '#RAPO19' படம் குறித்தான அறிவிப்பு வெளியான நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு முன்னதாக தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 12ஆம் தேதி படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமானது.
-
Welcome Onboard @AadhiOfficial for #RAPO19
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @srinivasaaoffl @NavinNooli @anbariv pic.twitter.com/utX4zVQQgJ
">Welcome Onboard @AadhiOfficial for #RAPO19
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 19, 2021
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @srinivasaaoffl @NavinNooli @anbariv pic.twitter.com/utX4zVQQgJWelcome Onboard @AadhiOfficial for #RAPO19
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 19, 2021
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @srinivasaaoffl @NavinNooli @anbariv pic.twitter.com/utX4zVQQgJ
தற்போது இப்படத்தில், நாயகன் ராம் பொதினேனிக்கு வில்லனாக நடிகர் ஆதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ராம், ஆதிக்கு இடையிலான காட்சிகள் படத்தில் அனல் பறக்கும் பரபரப்போடு மாஸாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் ,இந்த இரு திறமையான நடிகர்களும் திரையில் இணைந்து நடிப்பதில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: லிங்குசாமி - ராம் பொத்தினேனி படப்பிடிப்பு தொடக்கம்!