இயக்குநர் லிங்குசாமி 'சண்டைக்கோழி 2' படத்தைத் தொடர்ந்து, வேறு எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் நதியா, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு '#RAPO19' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அன்பறிவு சண்டை இயக்குநராக பயணியாற்றவுள்ளார்.
ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை 'மாஸ்டர் பீஸ்' நிறுவனம் பெற்றுள்ளது.
-
Brace yourself for the musical extravaganza🔥#RAPO19AudioOnAdityaMusic
— Aditya Music (@adityamusic) August 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A Rockstar @ThisIsDSP 🥁 Musical
Ustaad @ramsayz @AadhiOfficial @dirlingusamy @IamKrithiShetty @srinivasaaoffl @iAksharaGowda @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv @adityamusic pic.twitter.com/EhiDQsgTdP
">Brace yourself for the musical extravaganza🔥#RAPO19AudioOnAdityaMusic
— Aditya Music (@adityamusic) August 3, 2021
A Rockstar @ThisIsDSP 🥁 Musical
Ustaad @ramsayz @AadhiOfficial @dirlingusamy @IamKrithiShetty @srinivasaaoffl @iAksharaGowda @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv @adityamusic pic.twitter.com/EhiDQsgTdPBrace yourself for the musical extravaganza🔥#RAPO19AudioOnAdityaMusic
— Aditya Music (@adityamusic) August 3, 2021
A Rockstar @ThisIsDSP 🥁 Musical
Ustaad @ramsayz @AadhiOfficial @dirlingusamy @IamKrithiShetty @srinivasaaoffl @iAksharaGowda @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv @adityamusic pic.twitter.com/EhiDQsgTdP
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் '#RAPO19' படம் குறித்தான அறிவிப்பு வெளியான நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு முன்னதாக தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 12ஆம் தேதி படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமானது.
இப்படத்தில், நாயகன் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக நடிகர் ஆதி நடிக்கிறார். தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதையும் படிங்க: '1000 முத்தங்கள் லிங்கு' - கன்னத்தை நனைத்த எச்சிலாய் வசந்தபாலனின் கவிதை