ETV Bharat / sitara

'மறக்கமுடியாத அனுபவத்தை அளித்த பியர் கிரில்ஸ்க்கு நன்றி' - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி - நடிகர் ரஜினிகாந்த்

டிஸ்கவரி தொலைக்காட்சியின் ' The Wild with Bear Grylls' நிகழ்ச்சியின் பாகமாக நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் தனது வாழ்வில் மறக்கமுடியாத அனுபவத்தை அளித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

rajinikanth-says-thanks-to-bear-grylls-for-wild-with-bear-grylls

author img

By

Published : Jan 29, 2020, 2:27 PM IST

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'The Wild with Bear Grylls' நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை அதன் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார்.

கர்நாடக மாநிலம் பந்திபூர் தேசிய பூங்காவில் நடைபெற்ற படப்பிடிப்பில் பியர் கிரில்ஸ் உடன் இணைந்து தனது சுவாரஸ்யமான அனுபவங்களை ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் எனக் கூறப்படுகிறது.

Bear Grylls
பியர் கிரில்ஸ் ட்வீட் பதிவு

இதினிடையே தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், 'The Wild with Bear Grylls' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றது பற்றிய தனது அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி ட்வீட் செய்திருந்தார். அதில், 'பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்த 'Man vs. Wild' நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு 3.6 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்திருந்தது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய எபிசோடில் பங்கேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது' எனவும், #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டிருந்தார்.

Rajinikanth
ரஜினிகாந்த் ட்வீட் பதிவு

இந்த நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினிகாந்த் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், 'வாழ்வில் மறக்கமுடியாத அனுபவத்தை அளித்த பியர் கிரில்ஸ்க்கு நன்றி என்றும், நன்றி டிஸ்கவரி' எனவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

மேன் vs வைல்டு: புலிகள் காப்பகத்தின் விதிகளை மீறி ஆவணப்படம்...!

Intro:Body:

Rajini Thanking to girils

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.