ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் 'பெத்தண்ணா' என்ற பெயரிலும் ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தின் தமிழ், தெலுங்கு ட்ரெய்லர் நேற்று (அக்.27) வெளியானது. இதில் ரஜினி காளையன் கதாபாத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தோன்றியுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணாக தோன்றும் காளையன் பாசத்தை திரையில் தெளித்துள்ளார்.
குஷ்பு, மீனா ரஜினியின் மாமா பெண்ணுங்களா தோன்றியுள்ளனர். ட்ரெய்லரில் ரஜினி குஷியான மனநிலையில், இளமை துள்ளலுடன் தோன்றியுள்ளார். நயன்தாராவுடன் ரஜினி தோன்றும் காட்சி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
ட்ரெய்லரில் ரஜினி, "நீ யாருங்கிறது, நீ சேத்து வைக்கிற சொத்துலையும், சுத்தி இருக்கவங்க உன் மேல வச்சியிருக்கிற பயத்லையும் இல்ல..நீ செய்ற செயல்லையும் பேச்சுலையும் இருக்கு...இது வேதவாக்கு. நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள புள்ளைக்கு இருந்துச்சுனா அந்த சாமி இறங்கி வந்து அவளுக்கு துணையா நிக்கும்." போன்ற வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
ட்ரெய்லரை பார்த்து ரசிகர்களும் திரைப்பிரபலங்கள் சமூகவலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், ரஜினி தனது பேரன்களுடன் நேற்று (அக்.27) 'அண்ணாத்த' படத்தை கண்டு களித்துள்ளார். இது குறித்து அவர் தனது மகள் செளந்தர்யா சமீபத்தில் அறிமுகம் செய்த 'ஹூட்' செயலில் வழியாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த்!