ETV Bharat / sitara

Rajini Twitter Post: 'ஆஹா... பிரமாதம்!'; '83' படக்குழுவை புகழ்ந்த ரஜினிகாந்த்!

author img

By

Published : Dec 28, 2021, 8:52 PM IST

Rajini Twitter Post: இந்தியா உலகக் கோப்பையில் வென்றது குறித்த கதைப்பின்னணியில் உருவாக்கப்பட்ட '83' திரைப்படத்தை கண்ட ரஜினிகாந்த், அப்படக்குழுவை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

Rajini Twitter Post
Rajini Twitter Post

Rajini Twitter Post: கடந்த 1983ஆம் ஆண்டில் இந்தியா உலக கோப்பையை வென்றது குறித்த கதைப்பின்னணியில் உருவாக்கப்பட்ட '83' திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெஸ்ட் இன்டீசுடனான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றியை சாத்தியப்படுத்தியவர் அன்றைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்.

இந்த வரலாற்று தருணத்தை இந்திய அணியின் வெற்றிப் பயணத்தை தற்போது திரைப்படமாக்கியுள்ளனர். படத்தில் கபில்தேவ் ரோலில் ரன்வீர், அவரது மனைவியாக தீபிகா படுகோனே ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த புரூடென்ஷியல் உலகக்கோப்பை போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்றது முதல், உலக கோப்பையை வென்றது வரையிலான நிகழ்வுகள் படத்தின் கதையாக்கி இயக்கிவுள்ளார் கபீர் கான்.

இந்நிலையில் 83 படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "பிரமாதமான திரைப்படம். தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: Sivakarthikeyan Gesture: 'டிரம்ஸ்மேனுக்காக சைகை காட்டிய சிவகார்த்திகேயன்'; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.