ETV Bharat / sitara

தலைவா - தீம் மியூசிக்குடன் வெளியான தர்பார் மோஷன் போஸ்டர் - darbar theme music

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

DARBAR
author img

By

Published : Nov 7, 2019, 7:12 PM IST

‘பேட்ட’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 2020ஆம் ஆண்டு பொங்கல் விழாவையொட்டி இத்திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் மோஷன் போஸ்டர் தீம் மியூசிக்குடன் வெளியாகியுள்ளது.

அனிருத்தின் வழக்கமான இசையமைப்பு என்றாலும், ரஜினி லுக்கோடு பார்க்கும் பொழுது பக்கா மாஸாக இருக்கிறது. #DarbarThiruvizha என ரஜினி ரசிகர்கள் இந்த மோஷன் போஸ்டரை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி போலீஸ் வேடமேற்றிருக்கிறார், அதேபோல் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் இணைந்திருக்கிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Intro:Body:

Darbar Motion Poster 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.