ETV Bharat / sitara

ரிஷிகேஷ், கேதார்நாத், இமயமலை! ரஜினியின் ஆன்மிகப் பயண விவரம் இதோ! - undefined

ஒவ்வொரு படத்தையும் நடித்து முடிந்த பிறகு இமயமலை யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இம்முறை தனது மகள் ஐஸ்வர்யா தனுஷை உடன் அழைத்துச் சென்றுள்ளார். மருந்து மாத்திரைகைளை தற்போது உட்கொண்டு வரும் ரஜினிக்கு உதவியாக அவர் சென்றுள்ளதாகத் கூறப்படுகிறது.

ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்
author img

By

Published : Oct 14, 2019, 11:51 PM IST

சென்னை: இமயமலைக்கு யாத்திரை சென்றுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷில் முகாமிட்டுள்ளார்.

மது, புகை போன்ற பழக்கவழக்கங்களை முற்றிலுமாக கைவிட்ட நிலையில், அவ்வப்போது ஏற்படும் உடல் அசௌகரியங்கள் காரணமாக தினம்தோறும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டுவருகிறார் ரஜினிகாந்த். இதற்கு உதவியாக அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவருடன் இந்தப் பயணத்தில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரஜனிகாந்த் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காலை முதலே ஆசிரமத்தில் உள்ள பக்தர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

Rajini visits himalayas and fans taking photos
ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்

பின்னர் இங்கிருந்து கேதர்நாத் செல்லவுள்ள ரஜினி, அதனைத்தொடர்ந்து இமயமலையில் கடந்தாண்டு கட்டிய பாலாஜி குகைக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பின் அங்கிருந்து பாபா குகைக்கு சென்று தியானம் செய்யவும் உள்ளாராம்.

ஒரு வார கால பயணமாக இமயமலை சென்றுள்ள ரஜினியின் பயண கால அளவு நீட்டிக்கவும் அல்லது குறைக்கவும் வாய்ப்புள்ளதாம். இந்த ஆன்மிகப் பயணம் முடிவடைந்த பின்பு இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும், தனது 168ஆவது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தகவல்கள் வலம்வருகின்றன.

இதையும் படிங்க: ரஜினியுடன் செல்ஃபி எடுத்துகொண்ட பக்தர்கள்!

Intro:ரிஷிகேஷில் முகாமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்.Body:நடிகர் ரஜினிகாந்த் தான் நடிக்கும் ஒவ்வொரு படம் முடிந்த பிறகு இமயமலை யாத்திரை செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி தர்பார் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ரஜினிகாந்த் இமயமலைப் பயணம் மேற்கொண்டுள்ளார். மது புகை போன்ற பழக்கவழக்கங்களை முற்றிலுமாக கைவிட்ட நிலையில், அவ்வப்போது ஏற்படும் உடல் அசௌகரியங்கள் காரணமாக தினம்தோறும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வதால் நடிகர் ரஜினிகாந்திற்கு உதவியாக அவரது மகள் இந்த பயணத்தில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று
நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை முதலே ஆசிரமத்தில் உள்ள பக்தர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நாளை கேதர்நாத் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இமயமலையில் ரஜினிகாந்த் கடந்தாண்டு கட்டிய பாலாஜி குகைக்கு செல்லவுள்ளதாகவும் அங்கிருந்து பாபா குகைக்கு சென்று தியானம் செய்யும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வார கால பயணமாக சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் . இவரின் பயணத்தின் கால அளவு நீட்டிக்கவும் அல்லது குறைக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. Conclusion:இந்த ஆன்மீகப் பயணம் முடிவடைந்த பின்பு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 ஆவது படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.