ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தர்பார்’. லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நவம்பர் 7ஆம் தேதி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ரஜினியின் தீம் மியூசிக் வெளியாகும் என அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ‘தர்பார்’ வெளியீட்டுக்குப் பிறகு ரஜினி தனது அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2017 டிசம்பர் 31 அன்று தனது அரசியல் வருகை குறித்து அறிவித்த ரஜினி, கட்சி பெயர், கொடி ஆகியவற்றை பற்றி அறிவிக்கவில்லை. அவரது ரசிகர்கள் இதற்காக ஆர்வத்துடன் காத்துக்கிடக்கின்றனர். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிக்கவில்லை என்றாலும், ரஜினி மக்கள் மன்றம் மூலம் அவரது ரசிகர்கள் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கட்சி பற்றி அறிவிப்பு என செய்திகள் வெளியாகியிருப்பதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ’நண்பன் சூர்யாவுக்கு (ரஜினி) விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது’ - ’தேவா’ ஜெயக்குமார் வாழ்த்து