ETV Bharat / sitara

என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை புனித் - ரஜினி இரங்கல்

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு கன்னடத் திரையுலகிற்குப் பேரிழப்பு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

c
c
author img

By

Published : Nov 10, 2021, 1:16 PM IST

Updated : Nov 10, 2021, 2:18 PM IST

சென்னை: கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சிகிச்சைக்காக புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் உடல் மூன்று நாள்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.

ரஜினி இரங்கல்

சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், ராம் சரண், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அந்த சமயத்தில் உடல்நலக்குறைவால் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இதனால், அவரால் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இயலவில்லை.

இந்நிலையில், புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து ஹூட் தளத்தில் ஆடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  • நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத்…
    Rest in peace my child https://t.co/ebAa5NhJvj

    — Rajinikanth (@rajinikanth) November 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில் பேசும் ரஜினி, "மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி தற்போது குணமடைந்து வருகிறேன். புனித் ராஜ்குமார் இறந்த செய்தி எனக்கு இரண்டு நாட்கள் கழித்து தான் தெரிய வந்தது.

என் கண் முன்னாள் வளர்ந்த குழந்தை அவர். பெயர், புகழ் என கன்னட சினிமாவில் உச்சத்தில் இருந்தவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நால்வரின் வாழ்வில் ஒளி பாய்ச்சிய புனித் ராஜ்குமார்!

Last Updated : Nov 10, 2021, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.