ஹைதரபாத்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரஜினிகாந்தின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவரது ரத்த அழுத்தத்தை கவனமாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (டிச. 25) இரவு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். நாளை (டிச. 26) காலை அவரது உடல்நிலை மீண்டும் பரிசோதனை செய்யப்படும்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. நலம் விரும்பிகள் யாரும் மருத்துவமனையில் வந்து அவரை பார்க்க வேண்டாம் என்று மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவரது மகள் உடன் இருக்கிறார்.
தெலங்கானா மாநில ஆளுநர் தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெயம் ரவியின் ’பூமி’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு!