தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் அரசுடன் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் ஒன்றிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாவட்டத்தின் பிரதான பகுதிகளான வண்ணாரப்பேட்டை, டவுண், ஜங்சன், தச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு மக்களிடையே விழிப்புனர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: சென்னையில் 95 பேருக்கு கரோனா தொற்று