ETV Bharat / sitara

'தர்பார்' படத்தில் பாலிவுட் நடிகர்!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தர்பார்
author img

By

Published : Jun 26, 2019, 8:51 AM IST

Updated : Jun 26, 2019, 9:15 AM IST

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ’தர்பார்’. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் வெளியான தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தை கலக்கியது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். காமெடியனாக யோகி பாபு நடித்து வருகிறார்.

இவர்களோடு தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவாவும் இணைந்துள்ளார். 180 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வருவதால் தர்பார் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தர்பார் படத்தில் பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்கான ’ஏக் தீவானா தா’ படத்தில் நடித்தவர். இதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் வளர்ந்துவரும் இளம் கதாநாயகராக இருந்தாலும் நல்ல கதையம்சம் பொருந்திய படத்தில் நடித்து வருகிறார். பிரதீக் பாப்பர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மெயின் வில்லன் இவர் இல்லை என்றாலும் இவரது கதாபாத்திரம் இப்படத்தின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மேலும், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ’பிகில்’, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ’தர்பார்’ ஆகிய இரு திரைப்படங்களும் தீபாவளி தினத்தன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:விழுப்புரம்: வேடம்பட்டு கிராமத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Body:விழுப்புரத்தை அடுத்த வேடம்பட்டு கிராமத்தில் சந்தியா என்விரோ டெக் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் பிளாஸ்டிக், ரசாயனம் மற்றும் மருத்துவ கழிவுகள் டன் கணக்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் இந்த கழிவுகள் எரிக்கப்படுவதால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்து தூர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. மேலும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுத்தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Conclusion:இதற்கிடையே அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று தனியார் நிறுவனத்துக்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து போலீஸாரின் சமாதான பேச்சுவார்த்தை அடுத்து இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Jun 26, 2019, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.