ETV Bharat / sitara

'அண்ணாத்த' ரஜினியுடன் இயக்குநர் சிவா! - இயக்குநர் சிவாவின் அண்ணாத்தஞ

'அண்ணாத்த' படப்பிடிப்பில் நடிகர் ரஜினியோடு இயக்குநர் சிவா இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

rajini
rajini
author img

By

Published : Apr 12, 2021, 12:43 PM IST

Updated : Apr 12, 2021, 2:14 PM IST

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. கரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

அப்போது படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி, வீட்டில் ஒய்வெடுத்து வந்தார். 'அண்ணாத்த' படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இதனையடுத்து 'அண்ணாத்த' படப்பிடிப்பு மார்ச் 16ஆம் தேதி மீண்டும் தொடங்கி சென்னையில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து ஏப்ரல் 8ஆம் தேதி தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பின் இடையில் ரஜினியோடு இயக்குநர் சிவா இருக்கும் புகைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:மீண்டும் தொடங்கிய ரஜினியின் 'அண்ணாத்த'!

Last Updated : Apr 12, 2021, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.