ETV Bharat / sitara

இந்திய சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ராகவா லாரன்ஸ்! - சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் இந்திய சூப்பர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ragava lawrence
author img

By

Published : Jul 24, 2019, 5:07 PM IST

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி இயக்குநராகவும், நடிகராவும் ரசிகர்களை கவர்ந்துவருபவர் ராகவா லாரன்ஸ். தமிழில் முதன்முதலாக ’முனி’ படத்தை இயக்கி நடித்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதால் காமெடி கலந்த பேய் படமாக 'காஞ்சனா' படத்தை இயக்கினார். திருநங்கைகளை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் சரத்குமாரின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா 2, காஞ்சனா 3 படங்களையும் அவர் இயக்கி நடித்தார்.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் முதல்முறையாக சூப்பர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை 'காஞ்சனா 3' படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறது எனவும், 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்கி நடிக்கிறார் என்ற தகவலும் கோலிவுட்டிலிருந்து கசிகிறது.

Intro:காஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம்.Body:சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கும் 3D திரைப்படம்.
"இந்தியன்" சூப்பர் ஹீரோ கதையில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார்
என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Conclusion:படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப் படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.