ETV Bharat / sitara

'நான் செய்யும் சேவை என் குழந்தைகளை காப்பாற்றும்' - ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை கரோனா

நடிகர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அது குறித்த ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

raghava lawrence announces corona in his orphanage

author img

By

Published : May 29, 2020, 7:49 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். மேலும், கரோனா பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கும் பல உதவிகளை செய்துவருகிறார். இந்நிலையில், தனது அறக்கட்டளையில் வசித்து வரும் குழந்தைகளுக்கு கரோனா தொற்று இருப்பதாக உருக்கமாக பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், 'ஆதரவற்ற குழந்தைகளுக்காக அறக்கட்டளை நடத்துவதை நீங்கள் அறிவீர்கள். ஒரு வாரத்துக்கு முன்னால் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. அதில் 18 குழந்தைகளுக்கும், 3 ஊழியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் இரண்டு ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள். இது என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் பரிசோதனைக்குப் பின்னர் குழந்தைகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்துள்ளது. உடலின் வெப்பம் குறைந்து காய்ச்சலும் குறைந்துள்ளது. பரிசோதனையில் நெகட்டிவ் என்று தெரிந்தப்பின்னர் அவர்கள் திரும்பி அனுப்பப்படுவார்கள்.

இதற்கு உடனடியாக உதவிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் செய்கிற சேவைகள் என் குழந்தைகளைக் காப்பாற்றும். குழந்தைகள் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்தனை செய்யுங்கள். சேவையே கடவுள்' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... ராகவா லாரன்ஸ் வீட்டு முன்பு குவிந்த 20 நபர்கள்; நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.