ETV Bharat / sitara

படுக்கையறை காட்சி வெளியீடு: மறுபடியும் அதே புராணத்தை பாடிய 'ராதிகா ஆப்தே'

இணையத்தில் வெளியான படுக்கையறை காட்சியில் ஏன் என் பெயரை மட்டும் பயன்படுத்தப்படுகிறது என நடிகை ராதிகா ஆப்தே கேள்வி எழுப்பியுள்ளார்.

Radhika Apte
author img

By

Published : Jul 18, 2019, 10:54 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இதனைத் தொடர்ந்து 'தோனி', 'கபாலி' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் திரையுலகிலும் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது ராதிகா ஆப்தே ஸ்லம்டாக் மில்லியனர் பட நடிகர் தேவ் படேலுடன் 'தி வெட்டிங் கெஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மைக்கேல் விண்டர் பாட்டம் இயக்கியுள்ளார். இன்னும் இந்தியாவில் வெளியாகாத இப்படத்தின் படுக்கையறை காட்சி ஒன்று இணையத்தில் வெளியாக வைரலாகி வருகின்றது.

இது குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், ”'தி வெட்டிங் கெஸ்ட்' படத்தில் நிறைய அழகான காட்சிகள் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட படுக்கையறை காட்சி மட்டும் வெளியானது சமூகத்தின் மனநிலையை காட்டுகிறது.

அக்காட்சியை பகிரும் போது ஏன் எனது பெயரை மட்டும் பயன் படுத்தி பகிரப்படுகிறது. அக்காட்சியில் தேவ் படேலும் உள்ளார். அவர் பெயரை ஏன் பயன்படுத்தவில்லை.

நான் உலக சினிமாக்களை பார்த்து வளர்ந்தவள். நிறைய இடங்களுக்கு பயணம் செய்துள்ளேன். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மேடையில் நிர்வாணமாக நடிப்பதை பார்த்துள்ளேன். என்னுடைய உடலை நான் மிகவும் நேசிக்கிறேன். ஒரு நடிகராக என் உடலை ஒரு கருவியாக பயன்படுத்துகிறேன்.

இது மாதிரியான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்தவித அச்சமும் இல்லை, வெட்கமும் இல்லை. நான் பாதுகாப்புடன் இருப்பதாக நம்பிக்கை உள்ளது” என்றார்.

ராதிகா ஆப்தே நடிக்கும் படத்தில் பெண்கள் மீதான வன்முறை, பாலியல் அத்துமீறல் குறித்து வெளிப்படையாக பேசி நடிக்க கூடியவர். பல முன்னனி நடிகைகள் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடிக்கும் ராதிகா ஆப்தே, சில வருடங்களுக்கு முன் வெளியான `பார்ச்ட்' (parched) படத்திலும் இது போன்ற படுக்கையறை காட்சியில் நடித்ததும் அது தொடர்பான ராதிகா ஆப்தேவின் கருத்தும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.