கொச்சி: அந்தாதூன் மலையாள ரீமேக்கின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக கொச்சியில் முகாமிட்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா.
இதுகுறித்து ராஷி கண்ணா கூறும்போது, அந்தாதூன் கதையே பார்த்த பின் மிகவும் பிரமித்தேன். இதுபோன்றதொரு விறுவிறுப்பான படத்தில் நானும் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரன் இயக்கத்தில் அதன் மலையாள ரீமேக்கில் நடிப்பது கனவு போல் உள்ளது.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளோம். படப்பிடிப்பின்போது நிகழும் ஒவ்வொரு தருணமும் உற்சாகமாக உள்ளது. இந்தியாவிலுள்ள அழகான கடற்கரை நகரத்தில் படப்பிடிப்பில் உள்ளேன் என்று கூறஇனார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கொச்சி வந்தடைந்தார் ராஷி கண்ணா. விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் ஆகியோருடன் இணைந்து வெப் சீரிஸ் தொடரில் நடித்து முடித்துள்ள ராஷி கண்ணா தற்போது அந்தாதூன் ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பிளாக் காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகியிருந்த அந்தாதூன், ஹிந்தியில் 2018ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்தப் படம் ரூ. 400 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது.
அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ஆயுஷ்மான் கேரக்டரில் பிருத்விராஜும், ராதிகா ஆப்தே கேரக்டரில் ராஷி கண்ணா தோன்றவுள்ளனர்.
இதையும் படிங்க: 'நண்பன்' இல் முடிந்த பயணம் 'தளபதி 65' இல் தொடங்குகிறது - மனோஜ் பரமஹம்சா