கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து அக்டோபர் 15ஆம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அளித்துள்ள அனுமதி அளித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள திரையரங்குகள் நாளை(அக்.15) திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து நகரில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் இன்று(அக்.14) திறக்கப்பட்டு கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. தற்போது புதிய படங்கள் எதுவும் வெளியாகாததால், சில திரையரங்குகள் நாளை(அக்.15) திறக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’க/பெ.ரணசிங்கம் பட கதை என்னுடையது’ - எழுத்தாளர் பரபரப்பு புகார்